Kogilavani / 2015 ஜூலை 19 , பி.ப. 12:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா இன்ஜெஸ்ட்ரி தோட்டத்தின் பொதுமுகாமையாளர்களுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவாளர்கள் அச்சுறுத்தியதாக பாதிக்கப்பட்டவர், நோர்வூட் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டுக்கமைய அவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அச்சுறுத்தல் விடுத்தவர்களை கைதுசெய்து ஹட்டன், நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக நோர்வூட் பொலிஸார் நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
மேற்படி தோட்டத்தில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மெதுவாக பணி செய்யும் நடவடிக்கையில் சனிக்கிழமையும் (18) ஈடுபட்டனர்.
இந்நிலையில், அன்றைய தினம் ஒரு கிலோகிராம் முதல் 5 கிலோகிராம் வரை மட்டுமே கொழுந்தையே அவர்கள் பறித்ததாகவும் பறிக்கப்பட்ட கொழுந்தை தனது உத்தியோகபூர்வ இல்லத்துக்கு முன்பாக கொட்டி வைத்தனர் என நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் பொது முகாமையாளர் டீ.வேதமுத்து முறைப்பாடு செய்துள்ளார்.
இத்தோட்டத்தில் மெதுவாக பணி செய்யும் தொழிலாளர்கள், 18 கிலோகிராம் கொழுந்து பறித்தமைக்கு இரண்டு நாள் சம்பளம் வழங்குமாறு கோரி இ.தொ.கா.வின் அங்கத்தவர்கள், தனக்கு அச்சுறுத்தல் விடுத்ததாகவும் பாதிக்கப்பட்டவர் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உயர்தரப்பிடம் வினவிய போது,
இதற்கும்; தமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. தோட்ட தொழிலாளர்களிடம் ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வை வலியுறுத்தி மெதுவாக பணி செய்யும் நடவடிக்கையில் ஈடுபடுமாறு பணித்தோம். மெதுவாக பணி செய்யும் தொழிலாளர்கள் பறிக்கும் கொழுந்தை தோட்ட உத்தியோகஸ்தர்கள் நிறுவை செய்ய வராத பட்சத்தில் அந்தந்த தோட்டத்தில் வேலை பார்க்கும் கங்காணிமார்களின் மூலம் நிலுவை செய்யுமாறும் தொழிலுக்கு வருபவர்களின் பெயர்களை பதிவுசெய்துகொள்ளுமாறுமே நாங்கள் தெரிவித்திருந்தோம்' என அவர் மேலும் தெரிவித்தார்.
9 hours ago
9 hours ago
9 hours ago
13 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
9 hours ago
13 May 2026