Sudharshini / 2015 ஜூலை 19 , மு.ப. 11:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரவிந்திர விராஜ் அபயசிறி
மஹாவெல ஹபுககலந்த பிரதேசத்திலுள்ள பத்தினி தேவாலயத்திலிருந்த தங்க முலாம் பூசப்பட்ட இரண்டு சிலைகளைத் திருடிய சந்தேக நபர்கள் மூவரை இன்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிலைத்திருடர்கள் விட்டுச்சென்ற அலைபேசியை கண்காணித்தன் மூலம் அவர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அலவத்துகொட கந்தபொல தோட்ட பூசாரி மற்றும் பூசாரியின் மகன் ஆகியோருடன் மாத்தளை ரஜவீதியிலுள்ள பத்தினி தேவாலயத்தின் கப்புறாளை ஆகியோரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
19 அங்குல உயரமான 15கிலோ 500 கிராம் நிறையுடைய சிலையும் மற்றும் 22 அங்குல உயரமான 35கிலோ 350 கிராம் நிறையுடைய சிலைகளே இவ்வாறு திருடப்பட்டுள்ளன. சிலைகளுடன் தங்க ஆபரணங்களும் திருடப்பட்டுள்ளதாக விசாரணையின்மூலம் தெரியவந்துள்ளது.
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago