Administrator / 2015 ஜூலை 21 , மு.ப. 04:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
எதிர்வரும் பொதுத் தேர்தலில் வெற்றி பெரும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் புதிய அரசாங்கத்தில், பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவே இருப்பார் என்று ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் ஊடக பேச்சாளர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
கட்டுகஸ்தோட்டை நகரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்.
ஜனவரி மாதம் எட்டாம் திகதி இந் நாட்டில் புதியதொரு ஜனாதிபதி தெரிவான போதும் ஒரு புதிய அரசு தெரிவாகவில்லை. ஆனாலும் ரணில் விக்கிரமசிங்க ஒரு சிறு உறுப்பினர் தொகையை வைத்துக்கொண்டு ஒரு அரசை உருவாக்கிக் கொண்டார். அது எவ்விதத்திலும் சரியானதல்ல.
அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைப்பதாக கூறப்பட்டாலும் அவ்வாறு எந்த ஒரு பொருட்களினதும் விலை குறைந்ததாக தெரியவில்லை.
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் அமோக வெற்றிபெரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவே இருப்பார் என்றார்.
8 hours ago
8 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
8 hours ago
8 hours ago