Kogilavani / 2015 ஜூலை 23 , மு.ப. 04:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஆர்.கோகுலன்
வெலிமடை நகரிலுள்ள உணவகமொன்றில் இடம்பெற்ற இரட்டை கொலையுடன் தொடர்புடை சந்தேக நபர்கள் 6 பேரையும் எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வெலிமடை நீதவான் நீதிமன்ற நீதவான் பிரியந்த குனசேகர, நேற்று புதன்கிழமை (22) உத்தரவிட்டார்.
வெலிமடை நகரிலுள்ள உணவகத்தில் கடந்த 15ஆம் திகதி புதன்கிழமை இருதரப்பினருக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பில், ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து, சந்தேகத்தின் பேரில் வெலிமடை பொலிஸார் 6 பேரை கைதுசெய்திருந்தனர். சந்தேக நபர்கள் 6 பேரையும் நீதிமன்றில் நேற்று ஆஜர்படுத்திய போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கொலைச் சம்பவத்துடன் தொடர்படை சந்தேக நபர்களில் 5 பேரை, சம்பவம் இடம்பெற்ற தினமே பொலிஸார் கைதுசெய்திருந்தனர். மேலும் இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஆறாவது சந்தேக நபரை 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை, பொலிஸார் கைதுசெய்தனர்.
வெலிமடை நகரில் நேற்றைய தினமும் விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago