Kogilavani / 2015 ஜூலை 24 , மு.ப. 05:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கண்டி மாவட்ட காரியாலத்தின் மீது தாக்குதல் மேற்கொண்டவர்களை கைதுசெய்வதற்கான விசேட விசாரணையை ஆரம்பித்துள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜகத் சந்திரசேகர பண்டார தெரிவித்தார்.
கண்டி, மஹியாவைக்கு வந்த குழுவொன்றே இத்தாக்குதலை மேற்கொண்டதாக விசாணைகளின் போது தெரியவந்துள்ளது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கண்டி, மாவட்ட காரியாலயத்தின் மீது புதன்கிழமை(21) இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அங்கு கடமையில் இருந்த ஒருவரும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
இதன்போது, ஐ.தே.க.,வின் கண்டி மாவட்ட வேட்பாளர் ரவூப் ஹக்கீமின் பதாதைகளும் சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
6 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago