Sudharshini / 2015 ஜூலை 29 , மு.ப. 05:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்வராஜா
'பெருந்தோட்டங்கள் நஷ்டத்தில் இயங்கினால் கம்பனிகள் தோட்டங்களைவிட்டு வெளியேறட்டும்' என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
'கம்பனிகள் தோட்டங்களை விட்டு வெளியேறினால், தோட்டங்களில் தொழிலாளர்களினால் ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். சிறுதேயிலை தோட்ட அபிவிருத்திக்கு அரசு வழங்கும் மானியத்தை, பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும்' என இ.தொ.கா.வின் தலைவர் முத்துசிவலிங்கம் தெரிவித்தார்.
இதுதொடர்பில் தொடர்ந்து தெரிவித்துள்ள அவர்,
'பெருந்தோட்ட தொழலாளர்களின் சம்பள உயர்வு கோரிக்கையையும் அதனை பெற்றுகொள்வதற்கு முன்னெடுக்கப்பட்ட மெதுவாக பணிசெய்யும் போராட்டத்தையும் நாம் கைவிட்டுவிடவில்லை. தேர்தல்;காலம் என்பதால் தேர்தல் ஆணையாளரினால் பிறப்பிக்கப்பட்ட அறிவுறுத்தலுக்கமையவுமே போராட்டங்களை ஒத்திவைத்துள்ளோம். தேர்தல் முடிந்த ஓரிரு தினங்களில் தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துடன்; பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வோம்.
அப்பேசுசுவார்த்தையில் எமது முதலாவது கோரிக்கையாக இருப்பது, தோட்ட தொழிலாளர்கள் மெதுவாக பணியாற்றிய காலத்துக்கான சம்பளத்தை பெற்றுகொடுப்பதேயாகும். அதற்கடுத்தாகவே சம்பள உயர்வு பேச்சுவார்தை' என்றார்.
'தற்போதைய நிலையில் தோட்ட முதலாளிமார் சம்மேளனம் நாள் சம்பளமாக 700 ரூபாய் வழங்க முடியும் என எம்மிடம் தெரிவித்துள்ளது. அத்துடன், இ.தொ.கா.வினால் முன்வைக்கப்பட்ட சம்பள உயர்வுக் கோரிக்கைக்கு நான்கு கம்பனிகள் இணங்கியுள்ளன. எப்படியாயினும் தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வை இ.தொ.கா.வினால் மட்டுமே பெற்றுகொடுக்க முடியும்.
பெருந்தோட்டங்களில் தற்போதைய நிலையில் ஒரு இலட்சத்து 90 ஆயிரம் தொழிலாளர்களே இருந்து வருகின்றனர். ஆனால், சிறுதேயிலை தோட்டங்களைப் பொறுத்தவரையில் இதைவிட இருமடங்கு உரிமையாளர்கள் இருந்து வருகின்றனர்' என்றார்.
'சம்பள உயர்வு பேச்சுவார்த்தையின்போது, தொழிற்சங்க பிரதிநிதிகள் பலர் இருந்தபோதிலும் இ.தொ.காவை தவிர வேறு எவரும் அங்கு வாய்திறப்பதேயில்லை. அவர்கள், அங்கு சிற்றுண்டிகள் சாப்பிடுவதற்கும் தேநீர் அருந்துவருவதற்குமே இருமுறை தத்தமது வாய்களைத் திறப்பர். பேச்சுவார்த்தை முடிந்த மறுதினம் தாமே பேச்சுவார்த்தைகளை நடத்தியதாக அறிக்கைகளை விடுவர். இதுதான் உண்மை நிலை' என்றார்.
6 minute ago
13 May 2026
13 May 2026
13 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
13 May 2026
13 May 2026
13 May 2026