Sudharshini / 2015 ஓகஸ்ட் 02 , பி.ப. 12:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்வராஜா
'பதுளையில் கடந்த 5 வருடங்களாக, எமது சமூகத்தினர் அரசியல் அநாதைகளாக்கப்பட்டனர். அதுபோன்றதொரு துர்பாக்கிய நிலை மீண்டும் ஏற்படக்கூடாது' என ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட வேட்பாளர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
'தோல்விடையும் ஏனைய கட்சிகளுக்கு வாக்களிப்பதை தவிர்;த்து, வெற்றி உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் ஐ.தே.க.வின் தமிழ் வேட்பாளர்களக்கு வாக்களித்து, அவர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டும்;. இதன்மூலமே, எமது சமூகத்தின் தேவைகள், அபிலாஷைகள், விருப்புகளை நிறைவேற்றக் கூடியதாக இருக்கும்' என்றும் அவர் கூறினார்.
பதுளையில் சனிக்கழமை (1) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர்கள் எவரும் வெற்றிபெற முடியாத துர்பாக்கிய நிலை ஏற்பட்டது. இந்நிலையானது, எமது சமூக மேம்பாடுகளுக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியது' என்றார்.
'கடந்த தேர்தலில் பதுளை மாவட்டத்தில் இருபெரும்; கட்சிகளிலிருந்தும் பெரும்பான்மை சமூகத்தைச் சார்ந்த 8 பேர் வெற்றிபெற்று நாடாளுமன்றத்துக்கு தெரிவாகினர். இவர்களுக்கு பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து 8 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டன. அந்தவகையில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஐந்து வருடங்களுக்கும் பன்முகப்படுத்தப்பட்ட நிதியாக நாற்பது கோடி(40) ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது' என்றும் அவர் கூறினார்.
'ஆனால், அபிவிருத்தி வேலைகள் பெரும்பான்மை சமூகத்தை மையப்படுத்திய வகையிலே மேற்கொள்ளப்பட்டன. நாடாளுமன்றத்தில் கடந்த 2010 முதல் 2015 வரை பதுளை மாவட்டம் சார்பாக தமிழர் பிரதிநிதித்துவம் இன்மையால்;, பதுளை மாவட்டத்தில் எமது சமூகத்தினர் அரசியல் அநாதைகளாக்கப்பட்டனர்.
கொழும்பு, நுவரெலியா, கண்டி, மாத்தளை, கேகாலை போன்ற மாவட்டங்களில் ஐ.தே.க சார்பாக தமிழர் பிரதிநிதித்துவங்கள் அதிகரிப்பது போன்று, பதுளை மாவட்டத்திலும் ஐ.தே.க சார்பான இரு தமிழர் பிரதிநிதித்துவங்கள் உறுதிப்படுத்தபடல் வேண்டும்' என்று அவர் மேலும் கூறினார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago