Sudharshini / 2015 ஓகஸ்ட் 05 , பி.ப. 01:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா
மந்தியொன்று, பிரசாரக்கூட்டத்துக்கு வருகைதந்து மக்கள் பிரதிநிதிகள் வழங்கும் வாக்குறுதிகளை செவி குளிர கேட்டுகொண்டிருந்த விநோத சம்பவமொன்று ஹப்புத்தளையில் நடைபெற்றுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணியின் பிரசாரக்கூட்டம் ஹப்புத்தளையில் செவ்வாய்க்கிழமை (4) நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னணியின் உறுப்பினர்கள், வேட்பாளர்கள் உட்பட ஆதரவாளர்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.
கூட்டம் விறுவிறுப்பாக நடைபெற்றுகொண்டிருந்த போது, மந்தியொன்றும் அந்த கூட்டத்தில் கலந்துகொண்டிருப்பதை ஆதரவாளர்கள் அவதானித்துள்ளனர்.
அந்த மந்தி, முன்னணியின் வேட்பாளர்கள் கூறிய கருத்துக்களை செவிகொடுத்து கேட்டுகொண்டிருந்துள்ளது. பின்பு, ஆதரவாளர்கள் மந்திக்கு அருகில் சென்று அதன் தலையை வருடிவிட்டு அருந்துவதற்கு நீரையும் கொடுத்துள்ளனர்.

18 minute ago
6 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
6 hours ago
09 May 2026