Sudharshini / 2015 ஓகஸ்ட் 08 , மு.ப. 07:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.செல்வராஜா
ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட வேட்பாளர்கள் இருவர் இணைந்து பதுளை-அட்டாம்பிட்டிய பகுதியில் ஏற்பாடு செய்திருந்த இசை நிகழ்வின்போது, ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட மோதலில் கத்திக்குத்துக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட வேட்பாளர் இருவரது ஏற்பாட்டில், வெள்ளிக்கிழமை (07) இரவு அட்டாம்பிட்டிய நகரில் பிரசார கூட்டமும் இசை நிகழ்வும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில், கலந்துக்கொள்ள வந்த இரு தரப்பு ஆதரவாளர்களிடையே ஏற்பட்;ட வாக்குவாதம் மோதலாக மாறியுள்ளது.
இதன்போது, பீ.எம்.இசாரஉதயங்க என்ற 18வயதுடைய இளைஞன் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார்.
குறித்த நபரை அட்டாம்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின்பேரில் பொலிஸார் ஒருவரை கைதுசெய்துள்ளதுடன் அப்பகுதியின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
18 minute ago
6 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
6 hours ago
09 May 2026