Sudharshini / 2015 ஓகஸ்ட் 09 , மு.ப. 07:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
'பொதுமக்களின் சொத்தை சூறையாடி வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்துள்ள ராஜபக்ஷ குடும்பத்தினர் பற்றிய தகவல்கள், தினம் தினம் வந்து குவிந்த வண்ணம் உள்ளன. நீதிமன்ற உத்தரவுக்கமைய அவர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகளை வெகு விரைவில் எடுப்போம்' என பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
கண்டி பிரதேசத்தில் சனிக்கிழமை (08) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்,
'ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு, மக்களிடம் முன்வைக்க இன்று எந்த ஒரு கருப்பொருளும் இல்லை. எனவேதான், வாய்க்கு வந்ததையெல்லாம் கூறித் திரிகின்றனர்.
ஐ.தே.க ஆட்சி அமைப்பது உறுதியாகி விட்டது. ஐ.ம.சு.கூட்டமைப்பினர் தொடர்ந்தும் யுத்த வீரர்கள் பற்றியே முதலைக் கண்ணீர் வடித்தவண்ணம் உள்ளனர். ஆனால், உண்மையான யுத்த வீரரும் யுத்தத்தை வெற்றியீட்டிக் கொடுத்தவருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்காவை நடத்திய விதம் உங்களுக்குத் தெரியும். அவரை அன்று சிறையில் வைத்தமைக்கு எக்காரணமும் இல்லை.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இன்று பிளவுப்பட்டுள்ளது. மஹிந்த அணி, மைத்திரி அணி எனப் பிளவுப்பட்டுள்ளனர். விருப்பு வாக்குகளில் போட்டி போடுகின்றனர். கட்சிக்குள்ளே குத்துவெட்டு நிகழ்கிறது. ஆனால், ஐக்கிய தேசியக்கட்சி வெற்றி என்ற ஒரு இலக்கை மட்டும் மனதிற்கொண்டு முன்னோக்கிச் செல்கிறது. எனவே, ஐ.தே.க.வின் வெற்றி நிச்சயமானது' என குறிப்பிட்டார்.
32 minute ago
4 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
4 hours ago
4 hours ago
6 hours ago