2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

விருப்பு வாக்கில் திருப்தியில்லை

Kogilavani   / 2015 ஓகஸ்ட் 20 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-இக்பால் அலி

'விருப்பு வாக்கு விடயத்தில் திருப்தி இல்லாவிட்டாலும்கூட மதிப்பிடக் கூடியளவுக்கு கணிசமான வாக்குகளை வழங்கி என்னை வெற்றிபெறச் செய்த அனைத்து இன மக்களுக்கும் இச்சந்தர்ப்பத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்' என ஐக்கிய தேசியக் கட்சியில் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற எம்.எச்.ஏ.ஹலீம் கூறினார்.

கண்டி மாவட்ட செயலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார். இங்கு தொடர்ந்தும் தெரிவித்த அவர்,

'விருப்பு வாக்குகள் விடயத்தில் எனக்கு முழுமையான திருப்;தி இல்லை. ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ், எமது தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவின் செயற்திறனில் முன்னெடுத்துச் செல்லவுள்ள சக்திமிக்க அரசாங்கத்துக்கு என்னுடைய முழுமையான ஒத்துழைப்பை வழங்கவுள்ளேன்.

உண்மையிலேயே இம்மாவட்டத்தில் அரசியல் சமூக ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சியில் சிறப்புமிக்க நாடாமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் நல்லாட்சிக்கான நிலையான ஜனநாயகத்தை நோக்கி முன் நகரவுள்ள சக்திமிக்க அரசாங்கத்தில் என்னையும் அந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சேர்த்து மக்கள் பிரதிநிதியாக தெரிவு செய்தமைக்கு கண்டி மாவட்டத்திலுள்ள முஸ்லிம்,சிங்கள் தமிழ் மக்களுக்கு மனமுவந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X