Sudharshini / 2015 ஓகஸ்ட் 22 , மு.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கே.புஸ்பராஜ்
டயகம, ஈஸ்ட் தோட்டத்தை சேர்ந்த சின்னையா சங்கிலி என்ற 79 வயதான முதியவர் ஒருவரை கடந்த 30ஆம் திகதி முதல் காணவில்லை என டயகம பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 30ஆம் திகதி உறவினர்களுடன் மேற்படி முதியவர் கதிர்காமத்திற்கு யாத்திரை சென்றுள்ளார். இரவு 10 மணியளவில் விடுதியிலிருந்து வெளியே சென்ற இவர், விடுதிக்கு திரும்பாததையடுத்து உறவினர்கள் பல இடங்களிலும் தேடியுள்ளனர்.
இதனையடுத்து உறவினர்கள் டயகம பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்துள்ளனர்.
முறைப்பாட்டுக்கு அமைய டயகம பொலிஸார் விசாரணை செய்து வருவதோடு கதிர்காம பொலிஸ் நிலையத்திற்கும் தகவல் வழங்கியுள்ளதாக தெரிவித்தனர்.
மேற்படி முதியவரை யாரேனும் கண்டால் தகவல் தருமாறு உறவினர்கள் கோரியுள்ளனர். 0513504713, 0724923712, 0728137574 அலைபேசி இலக்கங்களுடன் தொடர்புக் கொண்டு அறியத் தரும்படி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago