Sudharshini / 2015 ஓகஸ்ட் 23 , பி.ப. 12:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
பேராதனை விவசாயத் திணைக்களம் 'சுகவாழ்வுக்கான 200 பிளஸ் காய்கறி' என்ற தொனிப்பொருளில் கண்காட்சி ஒன்றை ஒழுங்கு செய்துள்ளது.
இக்கண்காட்சி இன்று முதல் நாளை (26) வரை பேராதனை கண்ணொறுவவில் அமைந்துள்ள 'தோட்ட ஆய்வு மற்றும் அபிவிருத்தி நிலையத்தில்' நடைபெறவுள்ளது.
'பாதுகாப்பான முறையில் பாவனைக்கு உகந்த காய்கறிகளை உற்பத்தி செய்தல்', 'பொதியிடுதல்', 'களஞ்சியப்படுத்தல்' போன்ற விடயங்கள் தொடர்பாக உற்பத்தியாளர்களுக்கும் நுகர்வோருக்கும் விளக்கமளிக்கும் வகையில், இக்கண்காட்சி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ரொகான் விஜேகோன் தெரிவித்தார்.
மேலும், 'களைக்கொல்லி பாவனை', 'குறைந்த செலவில் கூடிய உற்பத்தி', 'காலான் உற்பத்தி' போன்ற விடயங்கள் குறித்தும் விளக்கமளிக்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago