எஸ்.சதிஸ் / 2019 ஜூலை 15 , மு.ப. 10:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி, பொது வேட்பாளர் ஒருவரையே ஜனாதிபதியாகத் தெரிவுசெய்ததாகவும் ஆனால் 2020இல், பொதுமக்களின் தலைவர் ஒருவரையே, ஜனாதிபதியாக நிறுத்தப்போவதாகவும் தேசிய மக்கள் ஒன்றியத்தின் தலைவர் சமிரபெரேரா தெரிவித்தார்.
எனவே, மக்கள் கேட்கின்ற தலைவர் ஒருவருக்கு இடமளிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
ஹட்டனில் இடம்பெற்ற மகளிர் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர்,
நாட்டில் மக்கள் எதிர்பார்க்கின்ற ஒரு தலைவரைக் கொண்டு வருவதற்காகவே, இந்த மக்களை அணிதிரட்டி, மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டிருப்பதாகவும் முன்வந்து செயற்படுகின்ற மக்களைத் திருப்பி அனுப்ப முடியாது என்றும் தெரிவித்ததுடன், மக்கள் நேசிக்கின்ற தலைவர் என்ற
அடிப்படையில், ரோயல் களியாட்ட விடுதிகளில் உள்ளவர்களைக் கொண்டு, இவர்தான் மக்களுடைய தலைவர் என நிறுத்தினால் அவர்களை மக்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை என்றும் தெரிவித்தார்.
எனவே மக்கள் கேட்கின்ற தலைவர் ஒருவருக்கு இடமளிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
40 minute ago
52 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
52 minute ago
2 hours ago
3 hours ago