2026 மே 09, சனிக்கிழமை

’2025ஆம் ஆண்டில் ஏற்றுமதி வருவாய் இரண்டு மடங்காகும்’

மொஹொமட் ஆஸிக்   / 2019 செப்டெம்பர் 12 , பி.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏற்றுமதி விவசாயப் பொருள்கள் ஏற்றுமதி மூலம் பெறப்படும் வெளிநாட்டு வருமானத்தை, 2025ஆம் ஆண்டு ஆகும்போது, 2 மடங்காக அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக, ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தின் அபிவிருத்திப் பணிப்பாளர் ஜனக லின்தர தெரிவித்தார்.

பேராதனை கெட்டம்பேயில், அமைந்துள்ள ஏறுமதி விவசாயத் திணைக்கள பிரதானக் காரியாலயத்தில், நேற்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

2017ஆம் ஆண்டில் ஏற்றுமதி விவசாய உற்பத்திப் பொருள்கள் 60,000 மெட்ரிட் தென்கள் ஏற்றுமதி செய்து 70,000 மில்லியன் ரூபாய் வருமானத்தைப் பெற்றுக்கொண்டதாகவும் இருந்தாலும் இத்தொகையை அதிகரிப்பதற்காக, பல திட்டங்களை மேற்கொண்டுள்ளதாக அவர் கூறினார்.

தங்களது பிரதான உற்பத்திப் பொள்களான மிளகு, 80 சதவீதம் இந்தியாவுக்கும் கருவா ஏற்றுமதியின் கனிசமான அளவு மெக்சி​க்வோக்கும் ஏற்றுமதி செய்யப்படுவதாக அவர் கூறினார்.

அந்த நாடுகள், பாரிய வருமானத்தைப் கொண்ட நாடுகள் இல்லை என்பதால், இலங்கைக்கு கிடைக்கும் வருமானம் குறைவாகவே உள்ளது என்றும் எனவே, ஐக்கிய அமெரிக்கா, பிரிட்டன் போன்ற அபிவிருத்தியடைந்த  நாடுகளுக்கு, இலங்கையின் உற்பத்திகளை ஏற்றுமதித் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.

அதற்கு, தரமான உற்பத்திகள் அவசியம் என்றும் இதைக் கருத்தில் கொண்டு, பல தறச் சான்றிதல்களை வழங்க  நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .