Kogilavani / 2021 ஜனவரி 10 , பி.ப. 12:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
நுவரெலியா பீட்ரு தோட்ட நிர்வாகத்துக்கு உட்பட்ட 29 ஏக்கர் தேயிலைக் காணி, செல்வந்தர் ஒருவருக்குக் குத்தகைக்கு விடப்பட்ட விடயம் தொடர்பில், இதுவரை தமது கவனத்துக்குக் கொண்டுவரப்படவில்லை என்றுத் தெரிவித்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிக் காரியதரசியும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ராமேஸ்வரன், கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேற்படித் தோட்ட நிர்வாகத்துக்கு உட்பட்ட நேஸ்பி, மூன்பிலேன், மாகாஸ்தோட்ட ஆகிய பிரிவுகளில், 29 ஏக்கர் தேயிலைக் காணி, செல்வந்தர் ஒருவருக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தேயிலை மீளநடுகைச் செய்யப்பட வேண்டிய தரிசுநிலக் காணியே இவ்வாறு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் இதனால், தாம் தொழிலை இழக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் மேற்படித் தோட்டங்களைச் சேர்ந்த சுமார் 60 சதவீதமான இளைஞர்கள், தொழில்வாய்ப்பின்றி அன்றாட வருமானத்துக்காக பாடுபட்டு வருகின்ற நிலையில், தோட்ட இளைஞர்களுக்காவது மேற்படிக் காணிகளை தோட்ட நிர்வாகம் பகிர்ந்தளித்திருக்கலாம் என்றும் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
இவ்விடயம் தொடர்பில், தோட்ட முகாமையாளரைத் தொடர்புகொண்டு கேட்டபோது, தோட்டக் கம்பனிகளின் உத்தரவுக்கு அமையவே, காணிகளைக் குத்தகைக்கு வழங்கியதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையிலேயே, ராமேஸ்வரன் எம்.பியைத் தொடர்புகொண்டு கேட்டபோது, இவ்வாறு தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்துப் பார்த்து நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago