Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Nirosh / 2018 ஒக்டோபர் 15 , பி.ப. 10:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெருந்தோட்டத் தொழிலாள ர்களின் சம்பள உயர்வு தொடர்பிலான மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தையும் நேற்று (15), எந்தவிதமான இணக்கப்பாடுமின்றி தோல்வியிலேயே முடிவடைந்துள்ளது.
அடிப்படைச் சம்பளமாக, ஆயிரம் ரூபாயை பெற்றுத்தரப்போவதாகத் தொடர்ந்து தொழிற்சங்கங்கள் ஆசைகாட்டி வருகின்றபோதிலும், முதலாளிமார் சம்மேளனம், நேற்று நடைபெற்றப் பேச்சுவார்த்தையில், அடிப்படைச் சம்பளத்தை 20 சதவீதத்தால் (100 ரூபாய்) அதிகரிக்கவே இணங்கியுள்ளது.
எனினும், இதற்குக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவிக்கும் தொழிற்சங்கங்கள், அரசாங்கத்தின் அழுத்தத்தை கோரி நிற்கின்றன.
2016 ஆம் ஆண்டு செய்துக்கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தம், நேற்று முன் தினம் (14) முடிவடைந்திருந்த நிலையில், கூட்டு ஒப்பந்தத்தைத் புதுப்பிப்பதற்கான மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தை, இராஜகிரியவில் உள்ள முதலாளிமார் சம்மேளனக் கட்டடத் தொகுதியில் நேற்று(15) நடைபெற்றது.
கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் தொழிற்சங்கங்களான, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான், பிரதி அமைச்சர் முத்துசிவலிங்கம், இலங்கை தேசியத் தோட்டத் தொழிலாளர் சார்பில் வடிவேல் சுரேஷ் எம்.பி மற்றும் கூட்டுக் கமிட்டியின் தலைவர் எஸ்.இராமநாதன் உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இவர்கள் முதலாளிமார் சம்மேளனத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், கறுப்பு உடையணிந்தும் கறுப்புப் பட்டியணிந்தும் பேச்சுவார்த்தையில் பங்கேற்றமை குறிப்பிட்டத்தக்கது.
வழமைபோன்று மூடிய கதவுகளுக்குப் பின்னாலேயே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில் ஊடகவியலாளர்களுக்குச் செய்தி சேகரிப்பதற்கான அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
நேற்று மூன்று மணிக்கு ஆரம்பமான பேச்சுவார்த்தை ஒரு மணித்தியாலம் வரை தொடர்ந்ததுடன், இறுதியில் எவ்வித இணக்கப்பாடுமின்றி முடிவுற்றது.
முதலாளிமார் சம்மேளனம் முன்வைத்த யோசனைகளை நிராகரித்த தொழிற்சங்கப் பிரதிநிதிகள், பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேறினர்.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago