Editorial / 2024 ஜூலை 10 , மு.ப. 10:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
மூன்று குழந்தைகளையும் பொலிஸாரிடம் ஒப்படைத்த தாய், அக்குழந்தைகளை ஒப்படைத்துவிட்டு, ரயில் நிலையத்துக்குச் சென்றபோது, பொலிஸார் கைது செய்து, வைத்தியசாலையில் அனுமதித்துள்ள சம்பவமொன்று ஹட்டன் பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.
மூன்று பிள்ளைகளையும் ஹட்டன் பொலிஸ் மகளிர் பணியகத்தில் ஒப்படைத்துவிட்டு புகையிரதத்தில் பாய்ந்து தன்னுயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற மூன்று பிள்ளைகளின் தாயை ஹட்டன் பொலிஸ் மகளிர் பணியக அதிகாரிகள் கைது செய்து டிக்கோயா ஆரம்ப வைத்தியசாலையில் செவ்வாய்க்கிழமை (09) அனுமதித்துள்ளனர்.

ஹட்டன்-டிக்கோயா பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாய், ஹட்டன் பொலிஸாரிடம் வந்து கணவருடன் வாழ முடியாது எனவும், அதன்படி 08, 06 மற்றும் 04 வயதுடைய இரண்டு ஆண் பிள்ளைகள் மற்றும் ஒரு பெண் உட்பட மூன்று பிள்ளைகளையும் ஒப்படைத்துள்ளார்.
ஹட்டன் பொலிஸ் மகளிர் பணியக அதிகாரிகள் திட்டிவிட்டு, மூன்று குழந்தைகளையும் பொலிஸ் நிலையத்தில் வைத்து, ரயில் நிலையத்திற்கு செல்ல முயன்றபோது, பெண் பொலிஸார் அந்த தாயை தடுத்து அழைத்துச் சென்றனர். பொலிஸ் காவலில் வைக்கப்பட்டு மூன்று குழந்தைகளையும் தந்தையிடம் பொலிஸார் ஒப்படைத்தனர்.

மன உளைச்சலுக்கு ஆளான மூன்று பிள்ளைகளின் தாயான இவர் (28) கொழும்பு பிரதேசத்தில் பணிபுரியும் தனது கணவருடன் தொடர்ந்து தகராறு செய்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மன உளைச்சலுக்கு ஆளான மனைவியைக் கட்டுப்படுத்த முடியாமல் உள்ளதால், வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று வைத்திய சிகிச்சை அளிக்குமாறு கணவன் (வயது 40) பொலிஸாரிடம் விடுத்த வேண்டுகோளின் பேரில் மூன்று பிள்ளைகளின் தாய் டிக்கோயா- கிளங்கன் ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஹட்டன் பொலிஸ் மகளிர் பணியகத்தின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்ட மூன்று குழந்தைகளுக்கு தேவையான உணவுகளை வழங்கி தாயின் அன்பை வழங்கும் வகையில் மகளிர் பணியக உத்தியோகத்தர்கள் கடமையாற்றினர்.பொலிஸ் நிலையத்தில் குழந்தைகள் மகிழ்ச்சியுடன் பொழுதை கழிக்க பானங்கள் மற்றும் பொம்மைகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. (ரஞ்சித் ராஜபக்ஷ)
34 minute ago
48 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
48 minute ago
1 hours ago
1 hours ago