2025 மே 13, செவ்வாய்க்கிழமை

300 கிலோகிராம் கருவாடு மீட்பு

Freelancer   / 2023 மே 14 , பி.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராமு தனராஜா

பாவனைக்கு உதவாத பழுதடைந்த  300 கிலோகிராம் கருவாடும், கருவாடு விற்பனைக்காக கொண்டு செல்வதற்கான லொறி ஒன்றினையும் கைப்பற்றியுள்ளதாக ஹாலிஎல சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது. 

ஹாலிஎல நகர் பகுதி மற்றும் சந்தைகளில் பாவனைக்கு உதவாத கருவாட்டினை விற்பனை செய்வதாக சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து உடன் குறித்த களஞ்சியசாலையை பரிசோதித்த சுகாதார அதிகாரிகள் பாவனைக்கு உதவாத 300 கிலோ கிராமிற்கும் அதிகமான கருவாட்டினை மீட்டுள்ளனர். 

குறித்த வியாபாரியான சந்தேக நபரை நாளைய தினம்  பதுளை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சுகாதார வைத்திய அதிகாரிகள்  தெரிவித்துள்ளதுடன்  குறித்த களஞ்சியசாலை  சுகாதார அதிகாரிகளினால் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X