2026 ஏப்ரல் 21, செவ்வாய்க்கிழமை

‘360 பேரில் 12 பேர் அடங்குகின்றனரா?’

Editorial   / 2020 மே 04 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேல் மாகாணத்தில் சிக்கிக்கொண்டிருந்த மலையக இளைஞர், யுவதிகளில் 321 பேர், மலையகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுள், போக்குவரத்து வசதிகள் இன்றி, புறக்கோட்டையில் அநாதரவான நிலையில் இருந்து, பின்னர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்ட 12 பேர் உள்ளடங்குகின்றனரா என, தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச் செயலாளர் மயில்வாகனம் திலகராஜ் கேள்வியழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக நேற்று (03) அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில்,

மலையகத்துக்கு இவர்களை அனுப்பி வைப்பது வரவேற்கத்தக்கது என்றும் எனினும், இவ்வாறு அனுப்பி வைக்கப்படுவது சரியான முறையில் நடைபெறுகின்றனவா என்பது தொடர்பில் ஊடகங்கள் உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அந்த 12 பேரின் நிலை தொடர்பாகவும் தெளிவுபடுத்தவேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .