Editorial / 2020 மே 04 , பி.ப. 04:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
பி.கேதீஸ்
அரசாங்கத்தால் வழங்கப்பட்டு வருகின்ற வாழ்வாதார கொடுப்பனவு 5,000 ரூபாயை, பெருந்தோட்டப்பகுதி மக்களுக்க வழங்குவதல், பல்வேறு சிக்கல் நிலவுவதாக, கொட்டக்கலை பிரதேச சபை உறுப்பினர் பொன்னையா ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தோட்டத் தொழிலாளர்கள் அனைவருக்கும் இந்தக் கொடுப்பனவு பெற்றுக்கொடுக்கப்படல் வேண்டும் என்றும் அவ்வாறு பாராபட்சம் காட்டும் உத்தியோகத்தர்களுக்கு எதிராக, கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தொழில் நிமித்தம் கொழும்புக்குச் சென்றிருந்து, தற்போது சம்பளம் இல்லாமல் வீட்டில் இருக்கும் பெருந்தோட்டத்துறையினருக்கும் இந்தக் கொடுப்பனவு கிடைக்கப் பெறவில்லை என்றும் பலருக்கு நிவாரண உதவி வழங்குவதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
இதனால், இந்தக் கொடுப்பனவை கிராம உத்தியோகத்தர்கள் எந்த அடிப்படையில் மக்களுக்கு வழங்குகின்றனர் என்பது தெளிவில்லாமல் உள்ளது என்றும் பெருந்தோட்டப் பகுதிகளில், செல்வந்த மக்கள் வாழவில்லை என்பதால், அவர்களுக்கு இந்த நிவாரண உதவி பெற்றுக்கொடுக்கப்படல் வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
40 minute ago
48 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
48 minute ago
2 hours ago