2026 மே 02, சனிக்கிழமை

50 மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது

Editorial   / 2020 ஏப்ரல் 11 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சுஜிதா

லிந்துலை- மட்டுக்கலை தோட்டத்தின் கேமஸ் பிரிவில், சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்டு வந்த ஒருவரை கைதுசெய்துள்ள பொலிஸார், அவரிடமிருந்து 50 மதுபான போத்தல்களையும் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த நபர் ஒரு போத்தல் மதுபானத்தை, 3,500 ரூபாய் முதல் ரூ 4,000 வரைக்கும் விற்பனை செய்துள்ளதாக தெரிய வருகிறது. 

பெருந்தோட்டப் பகுதிகளில் மதுபானசாலைகள் அனைத்துக்கும் சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த நபர் மிகவும் சூட்சுமுமான முறையில் மதுபான விற்பனையில் ஈடுபட்டு வருவதாக, பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்தே, மேற்படி நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரை, நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .