Editorial / 2019 செப்டெம்பர் 19 , மு.ப. 10:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
பா.நிரோஸ்
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 50 ரூபாய் கொடுப்பனவை வழங்க வேண்டிய அமைச்சர், அதை அங்கிகரிக்காதிருப்பதாகக் குற்றஞ்சாட்டிய அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், வீடமைப்புத் திட்டங்கள் விரைவுப்படுத்த வேண்டுமெனவும் அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டார்.
“ஷ்ரம வாசனா” எனப்படும் உழைப்பு அதிர்ஷ்ட நிதியம், சம்பளச் சபைகள் திருத்தச் சட்டமூலம், தொழிற்சாலைகள் கட்டளைகள் என்பன தொடர்பிலான விவாத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
மாதாந்தம் சுமார் 15 ஆயிரம் - 20 ஆயிரம் ரூபாயை, பெருந்தோட்டத் தொழிளாலர்களுக்கு சம்பளமாக கிடைத்தாலும் அது அவர்களுக்கு போதுமானத் தொகையில்லை என்றும் அரசாங்கம் 50 ரூபாயை கொடுக்க முன்வந்திருந்தாலும், இதற்குப் பொறுப்பான அமைச்சர், 50 ரூபாவை பெற்றுக்கொடுக்க அங்கிகாரமளிக்காததால் ,இந்த விடயம் இளுபறி நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை, தோட்டத் தொழிலாளர் ஒருவரின் சடலத்தை அடக்கம் செய்வதற்கு இராஜாங்க அமைச்சர் பாலித தேவருப்பெரும மேற்கொண்ட முயற்சிகளுக்கும் அவர் நன்றியைத் தெரிவித்தார்.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago