2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

6 மாணவர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்காகினர்

R.Maheshwary   / 2022 செப்டெம்பர் 22 , பி.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

மெய்யன்

தெல்தெனிய - ரங்கலை நாவலர் தமிழ் வித்தியாலய மாணவர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்களும் குளவிக் கொட்டுக்கு இலக்காகி தெல்தெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாணவர்கள் கற்றல் செயற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போதே, குளவிக் கொட்டுக்கு இலக்காகினர்.

பாடசாலையின்  பிரதான மண்டபத்துக்குள் நுழைந்த குளவிகள் மாணவர்களைக் கொட்டியுள்ளன.

இதில் ஆறு மாணவர்களும் நான்கு ஆசிரியர்களும் இரண்டு பெற்றோர்களும் அடங்குகின்றனர்.

குளவிக் கொட்டுக்கு இலக்கானவர்களில்  தொடர்ந்தும் நான்கு பேர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X