Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
R.Maheshwary / 2022 டிசெம்பர் 06 , பி.ப. 02:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
ராமு தனராஜா
80 இலட்ச ரூபாய் பெறுமதியான பழமையான புத்தர் சிலையுடன் மூவர் கந்தகெட்டிய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
புத்தர் சிலையொன்று விற்பனைக்காக வீடொன்றில் வைக்கப்பட்டிருப்பதாக, கந்தகெட்டிய பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து, கந்தகெட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் தசநாயகவின் ஆலோசனைக்கு அமைய, இரண்டு பொலிஸார் சிலையை கொள்வனவு செய்யும் நபர்கள் போல் குறித்த வீட்டுக்கு சென்று, சிலையை பரிசோதிக்க வேண்டும் என கூறிய போது சந்தேக நபர்கள் சிலையை கொடுத்துள்ளனர்.
இதன்போது ஏனைய பொலிஸாரால் குறித்த வீடு சுற்றிவளைக்கப்பட்டதுடன், 46,41,26 வயதுகளையுடைய மூவர் கைதுசெய்யப்பட்டனர்.
சந்தேக நபர்கள் மூவரையும் இன்று பதுளை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கந்தகெட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
17 May 2025
17 May 2025