Super User / 2011 ஒக்டோபர் 02 , பி.ப. 03:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

யாழ் தீவுப்பகுதி அபிவிருத்திச் சங்கம் ஏற்பாட்டில் கொழும்பில் இடம்பெற்ற கூட்டமொன்றில ஒன்றில் பேராசிரியர் இரா. சிவசந்திரன் தெரிவித்தார்.
கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக மக்கள் முன்னணி வேட்பாளர் என வேலணை வேணியனை ஆதரித்து பேராசிரியர் இரா.சிவசந்திரன் மேலும் உரையாற்றுகையில் கூறியதாவது:
வடக்கு, கிழக்குப் பகுதிகளில் சமீபத்தில் நடைபெற்ற உள்ளுராட்சித் தேர்தல்களில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு பெரும்பான்மையான உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றியதன் மூலம் தமிழர் தேசிய இன அடையாளத்தைப் பேணியதுடன் எமது 'இறைமை'யை எம்மவர்களிடமே கொடுப்போம் என்ற உறுதி பேணப்பட்டது. இதனால் இந்தியா உட்பட சர்வதேசமும், ஜ.நாவும் தமிழர் தேசியப் பிரச்சினையைத் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன்தான் பேசித் தீர்க்க வேண்டுமென்று இலங்கை அரசை வலியுறுத்தி வருகின்றன. உள்ளூராட்சித் தேர்தல் மூலம் நல்லதோர் செய்தியை நாம் உலகிற்கு சொல்லியதன் விளைவே இதுவாகும்.
அதேபோன்று வலுவான செய்தியை கொழும்பு மாநகர சபை தேர்தலில் மார்ச் 8 இல் தமிழர்கள்; வெளிப்படுத்த வேண்டியவர்களாக உள்ளனர்;. கொழும்பு மாநகரசபைத் தேர்தலில் தமிழர் ஆட்சியதிகாரத்தைப் பெறக்கூடிய அரிய வாய்ப்பு உள்ளது. ஏற்கெனவே இரு தமிழர்கள் கொழும்பு மேயர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட வரலாறு உள்ளது. இவ் வரலாற்றை மீளவும் எழுதுவோம்.
இணக்க அரசியல் என்ற ஏமாற்று குரலுக்கு விலைபோகாது தெளிவாகச் சிந்தித்து துணிவுடன் மனோ கணேசனின் தலைமையிலான மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு வாக்களித்து தமிழர்கள் விலைபோகாதவர்கள், தன்மானம் உள்ளவர்கள், வரலாறுகளை மறக்காதவர்கள் என்பதை கொழும்பு நகர மக்கள் நிலைநிறுத்துதல் வேண்டும்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் அது சார்ந்த கூட்டணியும் தமிழர் வரலாற்றில் துன்ப துயரங்களை அளித்ததோடு மோசமான இனவாத அணுகுமுறையையே தமிழர் மேல் காட்டி வருகின்றது.
பச்சை கட்சியும் சிங்கள பெரும்பான்மை நலன் சார்ந்ததே. சர்வதேசம் இந்த அரசை நோக்கி வீசும் கணைகளுக்கு ஆலோசனை வழங்கி அரசை பாதுகாக்கும் செயலில் தான் பச்சை கட்சியும் செயற்பட்டு வருகின்றது என்பதை தமிழர்கள் மறக்கக் கூடாது. கடந்த 63 வருடங்களாக மாறி மாறி வந்த நீலக் கட்சியும், பச்சைக் கட்சியும் தான் தமிழர்களின் இன்றைய மோசமான நிலைக்கு காரணமானவர்கள்.
கொழும்பு வாழ் தமிழர்கள் முக்கியமாக வாக்களிப்பில் கவனம் கொள்ளுதல் வேண்டும். முதலில் எல்லோரும் வாக்களிக்க வேண்டும் என்ற உறுதியை கொள்ளுதல் வேண்டும். அது எமது உரிமை மாத்திரம் அல்ல. இறைமையாகும். எமது இறைமையை நாம் விலை போகாத கொள்கைப் பற்றுக் கொண்ட நம்பிக்கைக்குரியவர்களிடமே கொடுக்க வேண்டும்.
மனோ கணேசன் தலைமையிலான மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு வாக்களித்த பின்னர் கட்சியில் நீண்ட காலமாக அயராது கொள்கைப்பிடிப்புடன் உழைத்து வருபவர்களின் விருப்பு இலக்கத்தில் கவனம் கொள்ளுதல் வேண்டும். அந்தவகையில் கட்சியின் நீண்ட காலத் தொண்டரும் இரண்டு முறை கொழும்பு மாநகரசபை அங்கத்தவராகக் கடமையாற்றியவரும் சமூக சமயத் தொண்டருமான வேலணை வேணியனை அவசியம் தேர்ந்தெடுக்க வேண்டுமென தீவுப்பகுதி அபிவிருத்தி சங்கம் சார்பாக கோருகின்றோம்."

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .