2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

ஆசிர்வாத பெருவிழா...

Princiya Dixci   / 2015 நவம்பர் 04 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

முகத்துவார மிஸ்பா ஜெப மிஷனறியின் ஆசிர்வாத பெருவிழா, கொழும்பு, ஜிந்துப்பிட்டி நீதிராஜா மண்டபத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (08) மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. 

நாட்டில் முன்னேற்றமும் அபிவிருத்தியும் நிரந்தர சமாதானமும் ஏற்பட இலங்கையின் மீது இறையருள் பொழியவும் நாடு ஆசிர்வதிக்கப்பட வேண்டும் எனவும் நாடெங்கிலும் விசேட பிரார்த்தனையை முகத்துவார மிஸ்பா ஜெப மிஷனறி ஏற்பாடு செய்து வருகின்றது. 

இதன் ஆரம்ப நிகழ்வாக இடம்பெறும் இவ் ஆசிர்வாத பெருவிழாவில், தேவ செய்தியை மிஸ்பா ஜெப மிஷனறி ஆலயத்தின் பிரதான போதகரும் ஸ்தாபகருமான கலாநிதி ஜெயம் சாரங்கபாணி வழங்குவார். விசேட ஆராதனையும் அபிஷேகமும் மிஸ்பா ஜெப ஆலயத்தில் காலை 8.30 மணிக்கு நடைபெறும்.

மேலதிக விவரங்களுக்கு 011 - 2528355 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் தலைநகர்வாழ் அனைத்து மக்களையும் குடும்பமாக வந்து தேவ ஆசிர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுமாறும் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X