S. Shivany / 2020 நவம்பர் 08 , பி.ப. 12:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

என்.ஜெயரட்னம், துசித குமார
ஊரடங்கு உத்தரவு அமுலில் இருந்த காலப்பகுதியில், களுத்துறை சென்றல் சந்தியில், களுத்துறை விசேட அதிரடிப் படை அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட வீதிச் சோதனை நடவடிக்கைகளின்போது. சட்டவிரோதமான முறையில் முச்சக்கர வண்டி மற்றும் கார் ஒன்றில் கொண்டுச்செல்லப்பட்ட ஆயுதங்கள் சிலவற்றுடன் எழுவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இதன்போது, நவீன ரக சொகுசு கார் ஒன்றையும் முச்சக்கர வண்டி ஒன்றையும் நான்கு வாள்கள், ஆறு அரிவாள்கள், ஒரு கைக்குண்டு, இரு டீ-56 ரக துப்பாக்கி தோட்டாக்கள், இரு வெற்று டீ-56 ரக துப்பாக்கி தோட்டங்கள் மற்றும் கையடக்க தொலைபேசிகள் என்பவற்றை கைப்பற்றிய பொலிஸார், 22 மற்றும் 36 வயதுக்கு உட்பட்ட பயாகலை பகுதியைச் சேர்ந்த மூவரையும், களுத்துறை பகுதியைச் சேர்ந்த இருவரையும், மத்துகமைப் பகுதியைச் சேர்ந்த இருவரையும்; கைதுசெய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களை, களுத்துறை நீதிமன்றத்தின் பதில் நீதவான் ரவி டொமிங்கோ முன்னிலையில் ஆர்படுத்தியபோது, மூவரை மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்ளவும், ஏனைய நால்வரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிவான் உத்தரவிட்டார்.
20 minute ago
31 minute ago
34 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
31 minute ago
34 minute ago
41 minute ago