2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

ஐவர் உயிரிழப்பிற்கு காரணமான இருவருக்கு அபராதம்

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 12 , மு.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட்.ஷாஜஹான்

கொச்சிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடங்காவல் பிரதேசத்தில் மண் எடுப்பதற்காகத் தோண்டப்பட்ட நீர் நிறைந்த குழிகளில்  விழுந்து பாடசாலை மாணவர்கள் இருவர் உட்பட ஐவர் உயிரிழந்தமை தொடர்பாகக் கைதுசெய்யப்பட்ட இருவருக்கு, நீர்கொழும்பு மேலதிக நீதவான் கபில துஸ்ஸந்த எபிட்டவல, தலா 10,000 ரூபாய் அபராதம் விதித்தார்.

அத்துடன், எதிர்வரும் நவம்பர் மாதம் 24ஆம் திகதிக்கு முன்னர் குறித்த குழிகளை மூடுமாறு பிரதிவாதிகளுக்கு உத்தரவிட்டதுடன், இது தொடர்பான அறிக்கையை மன்றில் சமர்ப்பிக்குமாறும் பொலிஸாருக்கு, நீதவான், செவ்வாய்க்கிழமை (11) உத்தரவிட்டார்.

குறித்த இருவரும், புவிச்சரிதவியல் சுரங்க அகழ்வுப் பணியகத்தினால் வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திர நிபந்தனைகளை மீறி, மண் அகழ்ந்தமை தொடர்பாகக் கொச்சிக்கடை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு, மன்றில் ஆஜர் செய்யப்பட்டனர்.

தோப்பு ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலய மாணவர்கள் இருவரின் உயிரிழப்பையடுத்து, கடந்த திங்கட்கிழமை (10) காலை, பிரதேசவாசிகளால் மேற்கொள்ளப்பட்ட பாரிய ஆர்ப்பாட்டத்தின் எதிரொலியாக குறித்த இருவரும், கொச்சிக்கடை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X