2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

கம்பஹா மாவட்ட தேசிய தைப்பொங்கல் விழா

Princiya Dixci   / 2016 ஜனவரி 18 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட்.ஷாஜஹான்
 
கம்பஹா மாவட்ட தேசிய தைப்பொங்கல் விழா, நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (22) காலை நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ளதுடன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க உட்பட அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்நிகழ்வில், சர்வமத தலைவர்களும் கம்பஹா மாவட்டத்தில் அமைந்துள்ள 12 பாடசாலைகளில் ஒவ்வொரு பாடசாலைகளிலிருந்தும் 52 மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் கலந்துகொள்ளவுள்ளதாக கல்லூரியின் அதிபர் என்.புவனேஸ்வரராஜா தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X