2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

களஞ்சியசாலையில் கைவரிசை; 22 பேர் கைது

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 01 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேலியகொட - நீர்கொழும்பு பிரதான வீதிக்கு அருகாமையில் அமைந்துள்ள அரிசி மற்றும் டின்மீன் களஞ்சியசாலையின் கூரையை பிரித்து கடந்த இரு மாதகாலமாக களவாடியதாக கூறப்படும் 20 பேரையும் அதைக் கொள்வனவு செய்து விற்றதாக கூறப்படும் வியாபாரிகள் இருவரையும் சந்தேகத்தின் பேரில் இன்று செவ்வாய்கிழமை (01) பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த களஞ்சியசாலையில் இருந்து 1,000 மூட்டை அரிசி மற்றும் 200 டின்மீன் என்பன களவடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடடிவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X