2025 மே 06, செவ்வாய்க்கிழமை

களனியில் குளித்தால் தோல்நோய் வரும்

Niroshini   / 2017 ஜனவரி 23 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

களனி ஆற்றின் கித்துல்கல பிரதேசத்தில் வைத்து மலக் கழிவுகள் கலக்கப்படுவதால், அப்பகுதி மக்கள், களனி ஆற்றில் குளிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும், அவ்வாறு குளித்தால், தோல் நோய் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உல்லாசப் பயணத்துறை அபிவிருத்தியின் பொருட்டு, கித்துல்கல பிரதேசத்தில் களனி ஆறு அழிவுக்குட்படுத்தப்பட்டு வருவதாக, யட்டியாந்தோட்டைப் பிரதேசச் செயலாளர் மானெல் குலரத்ன தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அறிவித்துள்ள போதிலும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

எனவே, பொது மக்கள், அப்பகுதி களனி ஆற்றில் குளிப்பதைத் தவிர்க்குமாறு, வைத்தியர்கள் அறிவித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X