Janu / 2026 பெப்ரவரி 17 , பி.ப. 02:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகளாவிய தெற்கில் (Global South) முதன்முறையாக நடத்தப்படும் "AI தாக்க உச்சிமாநாடு 2026 இல் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க செவ்வாய்க்கிழமை (17) அன்று இந்தியா சென்றார்.
உருவாகி வரும் புதிய தொழில்நுட்பங்கள் பொருளாதாரங்களையும் சமூகங்களையும் மறுசீரமைத்து வரும் இவ்வேளையில், இலங்கையின் இந்தப் பங்கேற்பானது இந்திய-இலங்கை உறவின் ஆழத்தையும் முன்னுரிமையையும் பிரதிபலிக்கிறது. மேலும், புத்தாக்கங்கள் உள்ளடக்கியதாகவும், பொறுப்புணர்வோடும், மக்களை மையப்படுத்தியதாகவும் இருப்பதை உறுதி செய்வதற்கான இரு நாடுகளினதும் கூட்டு அர்ப்பணிப்பையும் இது வெளிப்படுத்துகிறது.
2024 டிசம்பரில் ஜனாதிபதி மேற்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க உத்தியோகபூர்வ விஜயம் மற்றும் 'பகிர்ந்து கொள்ளப்பட்ட எதிர்காலத்திற்கான பங்காண்மைகளை வளர்த்தல்' எனும் இருநாட்டுக் கூட்டுத் தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில், இணைப்புத்திறன், பொருளாதார ஈடுபாடு, டிஜிட்டல் ஒத்துழைப்பு, திறன் மேம்பாடு மற்றும் மக்களுக்கிடையிலான உறவுகள் ஆகியவற்றில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வேகம் தொடர்ச்சியாகப் பேணப்பட்டு வருகிறது.
தெற்காசியத் தலைவர்களில் ஒருவராக ஜனாதிபதி இதில் பங்கேற்பது, இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான உறவையும், எதிர்காலத்தை வடிவமைக்கும் விடயங்களில் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான அர்ப்பணிப்பையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
நெருங்கிய அண்டை நாடு எனும் பிணைப்பு, பரஸ்பர நம்பிக்கை மற்றும் நடைமுறை ஒத்துழைப்பு ஆகியவற்றின் மூலம் இந்திய-இலங்கை பங்காண்மையானது ஒரு தெளிவான இலக்கை நோக்கித் தொடர்ந்து பரிணமித்து வருகின்றது.


17 minute ago
34 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
34 minute ago
57 minute ago