2026 பெப்ரவரி 17, செவ்வாய்க்கிழமை

பாடசாலையில் பாலியல் சீண்டல் ; பொலிஸார் விசாரணை

Janu   / 2026 பெப்ரவரி 17 , பி.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டியில் அமைந்துள்ள பிரபல பெண்கள் பாடசாலையொன்றில் கல்வி கற்கும் 9 வயதுடைய மாணவி ஒருவர் பாடசாலைக்குள் வைத்து வெளி நபர் ஒருவரால் பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்பட்ட  சம்பவம் தொடர்பாக கண்டி பொலிஸ் நிலையத்தின் குழந்தைகள் மற்றும் மகளிர் பணியகம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

பாடசாலைக்குள் தனக்கு ஏற்பட்ட சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் கூறியதை அடுத்து, பெற்றோர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட  சிறுமி மருத்துவ சோதனைக்காக பேராதனை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

குறித்த பாடசாலையின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், வெளி நபர் ஒருவர் பாடசாலைக்குள் நுழைந்திருப்பது தெரிய வந்துள்ளது. அவர் எங்கிருந்து பாடசாலைக்குள் நுழைந்தார் என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பல ஆண்டுகளாக பாடசாலையில் பணியாற்றிய அனுபவம் வாய்ந்த பாதுகாவலர்கள் கடந்த காலங்களில் நீக்கப்பட்டு, புதியவர்கள் குழு சேர்க்கப்பட்ட நிலையில் இதுவும் மாணவிகளின் பாதுகாப்பின்மைக்கு காரணம் என  பெற்றோர் பாடசாலை நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளனர். 

சந்தேக நபரை கைது செய்வதற்கான விநாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X