Freelancer / 2021 டிசெம்பர் 14 , மு.ப. 10:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து அங்குனகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கைதி ஒருவரின் வயிற்றில் இருந்து 56 கிராம் வெள்ளி நகை மீட்கப்பட்டுள்ளது.
குறித்த கைதி நகையை விழுங்கியதாக கூறப்பட்ட நிலையில், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நேற்று (13) நகையை மீட்டுள்ளனர்.
மேலும், இவரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டதுடன், வெள்ளி நகையும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரை மலம் கழிக்க வைத்திருந்ததாகவும், இதன்போது நீல நிற கார்பன் பேப்பரில் சுற்றப்பட்டு, வெள்ளை பொலித்தீனில் சுற்றப்பட்ட நிலையில் நகைமீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் 51 வயதுடைய நுகேகொட - மிரிஹான பிரதேசத்தை சேர்ந்தவர் என்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவிக்கின்றனர்.
16 minute ago
23 minute ago
2 hours ago
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
23 minute ago
2 hours ago
05 Nov 2025