Freelancer / 2022 நவம்பர் 02 , பி.ப. 05:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பிலும் புறநகர்ப் பகுதிகளிலும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை உச்ச மட்டத்தை எட்டும் என பிரதம வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி எச்சரித்துள்ளார்.
வருடத்தின் இறுதி மூன்று மாதங்களிலும் அடுத்த வருடத்தின் ஆரம்பத்திலும் டெங்கு தீவிரமடையும் என்றார்.
தெஹிவளை, கல்கிசை, கோட்டே மற்றும் கொலன்னாவ போன்ற பகுதிகளில் தற்போது தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.
சுகாதார அமைச்சின் புள்ளிவிவரங்களின் படி, இந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் 586 தொற்றாளர்கள் பதிவாகியிருந்தனர், மேலும் நாடு முழுவதும் இதுவரை 49,000 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. (R)
58 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
1 hours ago
2 hours ago