Editorial / 2021 நவம்பர் 22 , பி.ப. 05:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

கொழும்பில் உள்ள நாட்டாமைகள் அனைவரும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதுடன், எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். இதனால், கொழும்பின் பிரதான இடங்களில் பரபரப்பான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.
தங்களுக்கான கொடுப்பனவை, 15 ரூபாவினால் அதிகரித்து தருமாறு கோரியே, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போதைக்கு அவர்களுக்கு மூடையொன்றை அல்லது பொதியொன்றை இறக்கினால் அல்லது ஏற்றினால், 10ரூபாய் அல்லது 8 ரூபாய் இன்றேல் 6 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகின்றன. இந்நிலையில், அந்தக் கொடுப்பனவை 15 ரூபாவினால் அதிகரித்து தருமாறு கோரியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சாதாரண ஹோட்டலொன்றில் ஒரு கோப்பை தேநீரின் விலை 30 ரூபாயாகும் என சுட்டிக்காட்டியுள்ள அவர்கள், தங்களுக்கான கொடுப்பனவை 15 ரூபாவினால் அதிகரிக்குமாறு கோரியுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .