Princiya Dixci / 2015 ஒக்டோபர் 13 , பி.ப. 12:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த 2014ஆம் ஆண்டு இடம்பெற்ற கலவரத்தினால் பாதிக்கப்பட்ட அளுத்கம, தர்கா நகர், வெலிப்பென்ன, பேருவளை மற்றும் துந்துவ நகரினை மீளக்கட்டியொழுப்பிய இராணுவ வீரர்கள், விமானப்படையினர், கடற்படையினர், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் அரச அதிகாரிகளை கௌரவிக்கும் நிகழ்வொன்று, நாளை புதன்கிழமை (14) நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அளுத்கம அபிவிருத்தி மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வு, தர்கா நகர், சாவிய வீதியிலுள்ள தெருப் பள்ளிவாசலில் ம‡ரிப் தொழுகையினை அடுத்து இடம்பெறவுள்ளது.
அளுத்கம அபிவிருத்தி மன்றத்தின் தலைவரான ஹுசைன் சாதீக் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, களுத்துறை மாவட்ட செயலாளர் யூ.டி.சி.ஜயலால், மேல் மாகாணத்துக்கு பொறுப்பான இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உபய மெதவல, சமயத் தலைவர்கள், பிரதேச பள்ளிவாசல் தலைவர்கள் மற்றும் கலவரத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.
4 minute ago
17 minute ago
25 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
17 minute ago
25 minute ago
26 minute ago