Princiya Dixci / 2017 மே 07 , மு.ப. 10:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
மினுவாங்கொடை சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலுள்ள வீடுகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில், குளிர்சாதனப் பெட்டிகளில் நீர் சேரும் குவளைகளுக்குள், நுளம்புகளின் குடம்பிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக, மினுவாங்கொடை பிரதான சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் சஷீ பிரியதர்ஷனீ தெரிவித்தார்.
அத்துடன், மினுவாங்கொடை சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில், டெங்கு நோய் பீடிக்கப்பட்டுள்ள 230 பேர் அடையாளங்காணப்பட்டுள்ள நிலையில், மேலும் 470 பேர், டெங்கு நோய் தாக்கத்துக்கு ஆளாகியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
கல்லொழுவை மற்றும் நெதகமுவை ஆகிய பிரதேசங்களில், ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் முடியும் வரையிலான காலப்பகுதிக்குள் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போதே, இவ்வாறானவர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் டொக்டர் தெரிவித்தார்.
இப்பிரதேசங்களிலுள்ள வீடுகள், தோட்டங்கள் என்பன கடுமையாகப் பரிசோதிக்கப்பட்டதுடன், குளிர்சாதனப் பெட்டிகளும் விசேட அவதானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, சோதிக்கப்பட்டதாகவும் தெரிவித்த டொக்டர், குளிர்சாதனப் பெட்டிகளின் பின்னால் பொருத்தப்பட்டுள்ள நீர் சேரும் குவளைகளுக்குள், நுளம்புகளின் குடம்பிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
எனவே, எந்நேரமும் வீடு மற்றும் வீட்டுச் சூழல் என்பவற்றோடு, குளிர்சாதனப் பெட்டிகளையும் அடிக்கடி துப்பரவு செய்து கொண்டால், தொடர்ந்து பரவும் டெங்கு நோய் தாக்கத்திலிருந்து தம்மையும் தமது குழந்தைகளையும் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்றும், டொக்டர் வலியுறுத்தினார்.
32 minute ago
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
3 hours ago
3 hours ago
3 hours ago