Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 02 , மு.ப. 09:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஊழியர்களின் எதிர்பார்ப்புகள் ஏமாற்றமாகித் திருப்திகரமற்ற ஓர் அரச நிறுவனமாக மாறியுள்ள சமுர்த்தி நிகழ்ச்சித் திட்டத்தை மிகவும் பயனுறுதிவாய்ந்ததாகவும் உற்பத்தித்திறன் மிக்கதாகவும் மாற்றி, நாட்டுக்குப் பயனுள்ள ஒரு நிறுவனமாக மாற்றும் வகையில் ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும் என அகில இலங்கை சமுர்த்தி முகாமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
நாடெங்கிலும் உள்ள சமுர்த்தி முகாமையாளர்கள் முகங்கொடுத்துள்ள தொழில் ரீதியான பிரச்சினைகள் தொடர்பாக ஜனாதிபதிக்கு விளக்கமளிப்பதற்காக அகில இலங்கை சமுர்த்தி முகாமையாளர்கள் சங்கத்தினர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, ஜனாதிபதி செயலகத்தில், நேற்றுத் திங்கட்கிழமை (01) சந்தித்து கலந்துரையாடினர். இச்சந்திப்பின் போதே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் சிறந்த முன்னணி நிதி நிறுவனமாகத் திகழ்ந்த சமுர்த்தி நிதி நிறுவனம் குறித்து எவ்வித மதிப்பீடுகளையும் செய்யாத கடந்த கால எதேச்சாதிகார ஆட்சியும் நிர்வாகமும் அந்த நிகழ்ச்சித் திட்டங்களையும் ஊழியர்களையும் பாதாளத்தில் தள்ளும் வகையில் பில்லியன் கணக்கான நிதியை கொள்ளையடிப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக அச்சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
ஆட்சேர்ப்பு மற்றும் பதவியுயர்வு திருத்தங்கள் அங்கிகரிக்கப்படாமை, 2013ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க திவிநெகும சட்டத்தின் மூலம் நிறைவேற்றப்பட்ட திவிநெகும அபிவிருத்தித் திணைக்களத்தின் தற்போதைய நிலைமைகள் மற்றும் பிரச்சினைகள், திவிநெகும திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு சுமார் 3 வருடமாகியும் இதுவரையில் எந்தவொரு ஊழியருக்கும் ஓய்வூதிய சம்பளம் கிடைக்காமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை இதன்போது ஜனாதிபதியிடம் அவர்கள் முன்வைத்தனர்.
இதையடுத்து, குறித்த நிறுவனங்களுடன் கலந்துரையாடி அப்பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி, இதன் போது உறுதியளித்துள்ளார்.
14 minute ago
21 minute ago
40 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
21 minute ago
40 minute ago
1 hours ago