2025 நவம்பர் 07, வெள்ளிக்கிழமை

சில முக்கிய அரச நிறுவனங்கள் பத்தரமுல்லைக்கு மாறும்

Editorial   / 2017 செப்டெம்பர் 10 , பி.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

முக்கிய அரச நிறுவனங்கள் அனைத்தும் பத்தரமுல்லைக்கு மாற்றப்படும். இதற்காக 3 கட்டடிடங்களை நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கட்டுள்ளது” என, மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.   

கடுவலை வாராந்த கண்காட்சி மற்றும் பஸ் நிலையத்தை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு, நேற்று  (09) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.   

அவர் தொரடந்து கருத்துத் தெரிவிக்கையில்,   

“மேல் மாகாணத்தில் கொழும்பு நகரத்தில் மனிதர்களுக்கு வாழக்கூடிய இடவசதிகள் இல்லாத காரணத்தாலும், வணிக துறையில் ஏற்பட்ட அதித வளர்ச்சி காரணத்தாலும் பொதுமக்கள் வாழ்வதற்கு ஏற்ற வகையிலான இடங்களாக கடுவலை, ஹோமாகம போன்ற பிரதேசங்கள் திகழ்கின்றன. இந்நிலையில், இப்பிரதேசங்களின் நகர வளர்ச்சி அதிமுக்கியமாகக் கருதப்படுகின்றது. இதன் காரணமாக, கடுவலையில் சரியான நகரத்திட்டமிடல் ஒன்றை கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்துள்ளது.    

“மேலும், மகாவலி வியாபாரத் திட்டத்தை போலவே, களனி கங்கை வியாபார திட்டமும் அவசியமாகும்” என்றார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X