2025 நவம்பர் 07, வெள்ளிக்கிழமை

ஞாபகார்த்த முத்திரை வெளியீடு: ஆலோசனைகள் கோரப்படுகின்றன

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2017 ஓகஸ்ட் 09 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அஞ்சல் திணைக்களத்தால் 2018ஆம் ஆண்டில் வெளியிடப்படவுள்ள ஞாபகார்த்த முத்திரைகளுக்கான தலைப்புத் தொடர்பான ஆலோசனைகள் பொது மக்களிடமிருந்து கோரப்பட்டுள்ளனவென, அஞ்சல் அதிபதி டீ.எல்.பீ.ஆர். அபயரத்ன, தெரிவித்தார்.

 

தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் முக்கியமான சம்பவங்கள், ஆண்டு நிறைவு கொண்டாட்டங்கள், மதிப்புக்குரிய நபர்கள், தேசிய பெருமையை வெளிப்படுத்தும் இயற்கைக் காட்சிகள், விளையாட்டு, தேசிய பெருமையை காட்டும் கலாசார விழுமியங்கள் ஆகிய விடங்களை உள்ளடக்கியதான தலைப்புகளின் கீழ், இதனை அனுப்ப முடியும்.

ஆலோசனையானது, அதன் முக்கியத்துவம் குறித்த சுருக்கமான விளக்கமும், திகதிளை உறுதிப்படுத்துவதற்கான எழுத்து மூலமான ஆவணங்கள் மற்றும் அனுப்புவரின் பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம், மின் அஞ்சல் முகவரி, கையொப்பம் முதலியனவும் அடங்கியதாக இருத்தல் வேண்டும்.

சகல ஆலோசனைகளும் எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்பதாக பணிப்பாளர், முத்திரைப் பணியகம், அஞ்சல் தலைமையகம், இல.310, டீ.ஆர். விஜயவர்தன மாவத்தை, கொழும்பு 01000 எனும் முகவரிக்கு அனுப்பப்படுதல் வேண்டும்.

இறுதித் திகதிக்கு பின்னரான ஆலோசனைகள் 2018 முத்திரை நிகழ்ச்சித் திட்டத்தில் உள்ளடக்கப்பட மாட்டாது எனவும் அஞ்சல் அதிபதி டீ.எல்.பீ.ஆர். அபயரத்ன மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X