2026 மார்ச் 18, புதன்கிழமை

தலைமறைவாக இருந்த திருடன் அகப்பட்டான்

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 15 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொரட்டுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஆறு திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த ஒருவரை, நேற்று புதன்கிழமை (14) இரவு 9 மணியளவில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பாணந்துறை பிரதேசத்தைச் சேர்ந்து 36 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த நபர், களவாடிய சில பொருட்களை தனது உடலில் மறைத்து வைத்திருந்த வேளையிலேயே கைது செய்யப்பட்டார் என மொரட்டுவை பொலிஸார் தெரிவித்தனர். 

இந்நபரை, மொரட்டுவை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாக மொரட்டுவை பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X