Princiya Dixci / 2016 ஜூலை 23 , மு.ப. 08:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் மாத்தளை, வவுனியா, கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் அம்பாறை மாவட்டங்களில் தீயணைப்பு பிரிவுக்காக தீயணைப்பு வாகனங்கள் மற்றும் அம்புலன்ஸ் வண்டிகளை வழங்கி வைக்கும் நிகழ்வு, நேற்று வெள்ளிக்கிழமை (22) முற்பகல், ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றதோடு, அவ்வாகனங்களுக்கான திறப்புகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோகபூர்வமாக வழங்கிவைத்தார்.
34 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு தீயணைப்பு வண்டிகளும் 9 மில்லியன் ரூபாய் பெறுமதியான 5 அம்புலன்ஸ் வண்டிகளும் இம்மாவட்டங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டன.
மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா, இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரட்ன, மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago