Kogilavani / 2017 ஏப்ரல் 09 , மு.ப. 09:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
குப்பையுடன் வீசப்பட்ட தொலைபேசிக் கட்டணப் பட்டியல் காரணமாக, பெண் ஒருவர் உட்பட மூவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக, மொறட்டுவை தலைமை பொது சுதாதார அதிகாரி மலிந்த ஜயவர்தன தெரிவித்தார்.
இவர்களில் ஹோட்டல் உரிமையாளர்கள் இருவர் உள்ளடங்குவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மொறட்டுவை பொலிஸ் அதிகாரிகளும் மொறட்டுவை தலைமை பொது சுதாதார அதிகாரிகளும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது, வீதியில் காணப்பட்ட குப்பைப் பையை எடுத்துச் சோதனைக்கு உட்படுத்தியபோது, அதிலிருந்து தொலைபேசியின் மாதாந்தக் கட்டணப் பட்டியல் எடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, மீட்கபடப்ட அலைபேசி கட்டணப் பட்டியலுக்கு உரிமையானவர்களை இனங்கண்டு, குப்பைகளை வீதியில் எறிந்தமைக்காக, அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
குப்பைகளைச் சேகரிப்பதற்கு முன்னெடுத்துள்ள முறை, கட்டுப்பாட்டுக்குள் உள்ளது என்றும் முறையான வகையில் குப்பைகளைச் சேகரிப்பது வீட்டிலிருக்கின்ற அனைவரினதும் கடமையாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
6 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago