2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

பணத்தை மோசடி செய்தவர் சிக்கினார்

Editorial   / 2020 ஜூன் 15 , மு.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

துசித குமார 
நீதிமன்றத்தால் கடந்த இரண்டு வருட காலப்பகுதியில் 10 பிடிவிறாந்துகள்  பிறப்பிக்கப்பட்ட நபர் ஒருவரை, பேருவளை பொலிஸார் நேற்று (14) கைதுசெய்துள்ளனர்.

பேருவளை பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, பேருவளை-ஹேனமரக்கல்ல வத்த பகுதியில் வைத்து மேற்படி சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

51 வயதுடைய இவர், களுத்துறை மாவட்டத்தில் பல பெண்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்று தருவதாகக் கூறி பணத்தை மோசடி செய்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரை, மத்துகம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X