Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2016 ஒக்டோபர் 03 , பி.ப. 12:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம். செல்வராஜா
பதுளை பொலிஸ் நிலையத்துக்கு உரித்தான பொலிஸ் தகவல்கள் மற்றும் அறிக்கைகள் அடங்கிய கோப்புகள் (Flies), நீர்கொழும்பு அமைந்துள்ள பட்டாசுத் தொழிற்சாலையொன்றின் களஞ்சிய அறையிலிருந்து மீட்கப்பட்டதாகக் கட்டானைப் பொலிஸார் தெரிவித்தனர்.
கட்டானைப் பொலிஸ் நிலையத்துக்குக் கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, விரைந்து செயற்பட்ட பொலிஸார், 58 பசளைப் பைகளினால் பொதி செய்யப்பட்டிருந்த மேற்படிக் கோப்புகளை மீட்டுள்ளனர்.
கடந்த 2004ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியின், பதுளை மாவட்ட பொலிஸ் தகவல்கள் மற்றும் அறிக்கைகளே, இவைகளென்று ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
பழமையான கடதாசிகளைப் பலர் தன்னிடம் வழங்குவதாகவும் குறித்த பைகளை, யார் கொண்டு வந்து கொடுத்தார்கள் எனத் தனக்கு ஞாபகமில்லையென்றும், பட்டாசுத் தொழிற்சாலையின் உரிமையாளர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
ஊவா மாகாணப் பிரதிப் பொலிஸ் அதிபர், மேற்படிப் பொதிகள் சட்டபூர்வமாக அகற்றப்பட்டதாகத் தெரிவித்தார்.
நீர்கொழும்பு பொலிஸ் அதிபர் ஜயந்த அத்துகோரல மற்றும் கட்டானைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜகத் சேனநாயக்க ஆகியோர், இது குறித்து தீவிர புலன்விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மீட்கப்பட்ட கோப்புகள், கட்டானைப் பொலிஸ் நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாகக் கட்டானைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
37 minute ago
46 minute ago
53 minute ago