2023 செப்டெம்பர் 27, புதன்கிழமை

பம்பலப்பிட்டியவில் கான்ஸ்டபிள் மீது கத்திக்​குத்து

Editorial   / 2023 செப்டெம்பர் 18 , பி.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

பம்பலப்பிட்டி பொன்சேகா வீதியில், அளுத்கடை இலக்கம் 06 இல் அமைந்துள்ள நீதவானின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிளை ஒருவர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார் என பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருபர்,  உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த காரின் கண்ணாடியை கழற்றும்  சத்தம் கேட்டு பொலிஸ் கான்ஸ்டபிள் அந்த இடத்திற்கு சென்றுள்ளார். அப்போது அவர்கள் தப்பியோட முயற்சித்தனர். அதிலொருவரே கத்தியால்  பொலிஸ் கான்ஸ்டபிளை   சரமாரியாக வெட்டிவிட்டு  ஓடிவிட்டார்.

கான்ஸ்டபிளின் வலது கை வெட்டப்பட்டதாகவும், சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு  கொண்டு செல்லப்பட்டதாகவும் பொலிஸார்  தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .