Princiya Dixci / 2016 நவம்பர் 09 , மு.ப. 08:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.இஸட்.ஷாஜஹான்
விமானம் பயணித்துக்கொண்டிருந்த வேளையில் சக பயணியின் பணத்தைத் திருடிய குற்றச்சாட்டில், கட்டுநாயக்க விமான நிலையப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட 26 வயதுடைய சீனப் பிரஜையை, வெள்ளிக்கிழமை (11) வரை விளக்கமறியலில் வைக்குமாறு, நீர்கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டார்.
கடந்த திங்கட்கிழமை (07), டுபாயிலிருந்து இலங்கைக்குப் பயணித்துக் கொண்டிருந்த யு.எல்.226 இலக்க விமானத்தில், சந்தேகநபர் பயணித்துள்ளார்.
குறித்த விமானத்தில் இலங்கையைச் சேர்ந்த நிதி நிறுவனமொன்றின் உயரதிகாரியொருவரும் பயணித்துள்ளார். அந்த அதிகாரி நித்திரையிலிருந்த வேளையில் சந்தேகநபரான சீனப் பிரஜை, குறித்த அதிகாரியின் பயணப் பையிலிருந்த 1,500 டொலர்களைத் திருடியுள்ளார்.
இதனை விமானப் பணிப் பெண்ணொருவர் அவதானித்து, தனது அதிகாரியிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, விமானம், கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததும், சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டதுடன், திருடப்பட்ட பணமும் மீட்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர், விமானங்களில் பயணித்து பயணிகளின் பணத்தையும் உடைமைகளையும் தொடர்ச்சியாகத் திருடி வந்துள்ளமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago