Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Thipaan / 2015 ஓகஸ்ட் 29 , மு.ப. 03:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
கொழும்பு - வெள்ளவத்தை பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற புகையிரத விபத்தில் மட்டக்களப்பைச் சேர்ந்த சிவலிங்கம் நிரோஷன் (வயது 27) என்ற இளைஞர் உயிரிழந்துள்ளதாக வெள்ளவத்தைப் பொலிஸார் தெரிவித்தனர்.
இவரின் சடலம் மீட்கப்பட்டு சனிக்கிழமை வெள்ளவத்தை மாநகர வைத்தியசாலையில் மரண விசாரணைக்காக வைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் இருந்து கொழும்பு வெள்ளவத்தையில் உள்ள உறவினர் ஒருவரின் திருமண வீட்டுக்கு குடும்பத்தாருடன் சென்ற இவர் வெள்ளிக்கிழமை மாலை வேளையில் தனது நேரத்தினை பொழுது போக்காக கழிக்கும் பொருட்டு புகையிரத தண்டவாளத்தின் ஊடாக நடந்து சென்றுள்ளார்.
இவ்வேளையில் புகையிரதம் இவரை மோதியுள்ளது. தூக்கி வீசப்பட்ட இவர் பாரதூரமான உட்காயங்களுக்குள்ளாகி அதிகளவு இரத்தப்போக்கு ஏற்பட்டு ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வீதியைச் சேர்ந்த இவர் ஒரு குறுந்திரைப்படக் கலைஞர் என்றும் ஏற்கெனவே சில குறுந்திரைப்படங்களைத் தயாரித்து வெளியிட்டவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
20 minute ago
25 minute ago
32 minute ago